புகைப்படத்தை பதிவிட்டு கண்கலங்கிய எஸ் ஏசி.. இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய மகன் தளபதி விஜய் இப்போது திரைத்துறையில் ஜொலிக்க ஆரம்பப்புள்ளி எஸ்ஏசி தான். இந்நிலையில் அரசியல் மற்றும் திரைப்படங்களில் எஸ்ஏசி கவனம் செலுத்தி வருகிறார்.

எஸ்ஏசியின் இளைய மகள் வித்யா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். இந்நிலையில் அவருடைய 37 வது நினைவு நாள் இன்று. அதை நினைவுகூர்ந்த எஸ்ஏசி தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுவயதில் தனது இரண்டு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 என பதிவிட்டுள்ளார்.

மிகுந்த மன வேதனையுடன் அந்த பதிவை எஸ்ஏசி வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர். விஜய் பல பேட்டிகளில் தன் தங்கையை இறப்பைப் பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

vijay sister
vijay sister

மேலும் அவர் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்திலேயே அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சியை தத்ரூபமாக நடித்திருப்பார். அதேபோல் கில்லி, சிவகாசி படங்களிலும் ஒரு அண்ணனாக அசத்தியிருப்பார். இந்நிலையில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இதுவும் ஒரு குடும்பம் சென்டிமென்ட் கதையாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது விஜய் ஹைதராபாத்க்கு சென்றுள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் விஜய் தங்கையின் நினைவு நாள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.