ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மியூசிக், தயாரிப்பைத் தாண்டி புது அவதாரம் எடுக்கும் யுவன்.. இனி அந்த போதையை அனுபவிக்கா முடியாதா.?

யுவனின் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட யுவனும் சில படங்களில் சறுக்கியதுண்டு. ஆனால் அவரது ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்போதுமே அவரது இசைக்கு அவர் தான் ராஜா, பிஜிஎம்க்கு அவர் தான் கிங் என பெருமை பேசுவது சமூக வலைதளங்களில் அதிகம். அப்படி இசையில் கொடிகட்டிப் பறக்கும் யுவன் இசையமைப்பில் இருந்து விலகினால் என்னாகும்?

இளம் வயதில் இசையமைப்பாளர்

இளையராஜாவின் மகன் என்ற அறிமுகத்தோடு இசைத்துறையில் அடியெடுத்த வைத்ததுடன் 16 வயதில்அரவிந்த் படத்தில் யுவனுக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. அதன்பின், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அவரது 17 வயதில் கம்போஸ் செய்த பாடல்கள் இன்றுவரை பலரது ஃபேவரெட் லிஸ்டில் இருக்கும். அப்படிப்பட்ட தரமான பாடல்களைப் போட்டுக் கொடுத்து, ரசிகர்களை கிறங்கடித்தவர்.

அன்றைய காலத்தில் இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான் கோலோட்சிக் கொண்டிருந்தபோது தனக்கென தனிப்பாதையில் பயணித்து, விஜய், அஜித், சரத்குமார், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். தனுஷின் முதல் படத்திலேயே அதிரி புதிரி பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்தார். சமீபத்தில் விஜயின் தி கோட் படத்திலும் அதிரடியான பாடல், மெலடி, பார்டி சாங் என கலந்து கட்டி அடித்து, பின்னணி இசையிலும் மாஸ் காட்டினார்.

யுவன் தயாரித்த படங்கள்

இதுவரை தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமின்றி, பியார் பிரேமா காதல், மாமனிதன், ஹீரோ,பொன் ஒன்று கண்டேன், ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்களையும் தயாரித்து, ஒரு வெற்றித் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது இசையும், இவர் தயாரிப்பில் உருவான படங்களையும் கண்டு ரசித்த ரசிகர்கள் இனிமேல் அவர் புதிய அவதாரம் எடுக்கவுள்ளதை ஆச்சர்யத்தோடு பார்க்கவுள்ளனர்.

இயக்குனர் அவதாரமெடுக்கும் ஆசை

ஏற்கனவே தன் தந்தை இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அப்படத்திற்கு ராஜா தி ஜர்னி என்று தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்றூ சில ஆண்டுகளுக்கு முன் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரபல யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ள அவர், தான் இயக்கவுள்ள படத்தில் சிம்புவை ஹீரோவாக நடிக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிம்பு- யுவன் கூட்டணியில் உருவான வல்லவன், மன்மதன், மா நாடு போன்ற படங்கள் எல்லாம் இசையிலும், பாடலிலும் பேசப்பட்டது. இந்தக் கூட்டணி படத்திலும் இசையிலும் மட்டுமல்லாமல், தற்போது யுவன் இயக்கவும் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த டிரக்ஸ் என்னாவது?

நிச்சயம் இப்படம் இளைஞர்களை மையப்படுத்திய கதையாகவும், காதல் மற்றும் ரொமான்ஸ் படமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் யுவனின் இசையில் தன்னை மறக்கடிக்கும் நிலை இருக்கும். ஆனால் இசையமைப்பில் இருந்து விலகி நடிப்புக்கும், இயக்குவதற்கும் சென்ற பல இசையமைப்பாளர்கள் பாடல்கள் பின்னாளில் சொதப்பியதுண்டு. யுவனின் இசையில் உருவான பாடல்களை டிரக்ஸ் லிஸ்டில் வைத்துள்ள ரசிகர்கள், யுவனின் பாடல்கள் இயக்குனர் அவதாரத்திற்குப் பின் எப்படி இருக்குமோ? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News