பிரபல நடிகருக்காக டிவியை உடைத்த சிறுவன்.. நம்மள விட பெரிய கோவக்காரனா இருப்பான் போல!

சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை அதனுடைய மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும். அதேபோல் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. ஒரு ஹீரோவுக்காக அவரது ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

உதாரணமாக கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பாதயாத்திரை செல்வது இவ்வளவு ஏன் தீ கூட குளிப்பார்கள். அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் தங்கள் ஹீரோவுக்காக ஏதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான குட்டி ரசிகரைத்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையாவின் 7 வயது மகன் விராட். இவன் பிரபல நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகன்.

தனிமையில் சிறுவன் விராட் தூக்குடு படத்தை பார்த்துக் கொண்டிருந்துள்ளான். தூக்குடு படத்தின் ஒரு சண்டை காட்சியில் ஹீரோவான மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டுவை அடிப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அடி வாங்குவதை விராட்டால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து மகேஷ் பாபு, சோனு சூட்டுவை அடித்து கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்கு வெளியே ஓடிச் சென்று கல் ஒன்றை எடுத்து வந்து ”என் தலைவனையாடா நீ அடிக்கிற. உன்னை என்ன செய்றேன் பாரு” என்று கூறியபடியே மகேஷ் பாபுவை நோக்கி கல்லை எறிந்துள்ளான். பின்னர் டி.வி உடைந்த சத்தம் கேட்டு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது தான் சிறுவன் சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது.

இந்த செய்தி சமூக வலைதலங்களில் வைரலானது. இது தொடர்பான செய்தியை சிலர் நடிகர் சோனு சூட்டுவின் டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளனர். இதனை பார்த்த சோனு சூட், ” இதுபோன்று டிவியை உடைக்க வேண்டாம். பிறகு உங்கள் தந்தை என்னிடம் தான் டி.வி. வங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது ரசிகனான சிறுவன் விராட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

sonu-sood-cinemapettai
sonu-sood-cinemapettai
- Advertisement -