இந்தியன் 2 படத்தால் கடுப்பான பிரபலம்.. ஆள விடுங்க சாமி என ஓட்டம்!

கமலஹாசன் நடிக்கும் சமீபத்திய படங்கள் அனைத்துமே காலவரையின்றி மூடப்படுகிறது என போர்டு வைக்கும் அளவுக்கு தயாரிப்பாளர்களை சோதித்து வருகிறது. தயாரிப்பாளர்களை விட கமல் படத்தில் ஒப்பந்தமாகும் நடிகர்களையும் சோதிக்கிறதாம்.

கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் உருவாகி வந்தது. லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்தியன் 2 படம் ஆரம்பத்திலிருந்தே பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தது. அதிலும் குறிப்பாக கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் இறந்தது படத்திற்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. அதன் பிறகு படத்தை சில காலம் நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கொரானா.

ஆக மொத்தம் இந்தியன் 2 படம் எழுந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் லைக்கா நிறுவனம் சங்கர் மற்றும் கமலஹாசன் இடையே பட்ஜெட் காரணமாக வாய் விட்டது. இதனால் கடுப்பான கமல்ஹாசன் படத்தை விட்டு கிளம்பிவிட்டார். ஷங்கரும் வேறு படத்திற்கு போக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்தியன் 2 படத்தில் கமிட்டான பல நடிகர்களும் டெக்னீஷியன்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராக முதலில் ஒப்பந்தமானவர் ரவிவர்மன். ஆனால் ஒத்துவராது என டாட்டா காட்டி விட்டார். அவரை தொடர்ந்து எந்திரன் படத்தில் பணியாற்றிய ரத்னவேலு என்பவரை கேமராமேனாக ஒப்பந்தம் செய்தனர்.

indian2-cinemapettai-01
indian2-cinemapettai-01

ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே செல்வதால் தற்போது அவரும் படத்தை விட்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது. இதனால் லைக்கா நிறுவனம் பாதிக்கிணறு தாண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்