முன்பு சீரியலில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல வில்லி பூஜா.. இப்போ இவங்க என்ன செய்யுறாங்க தெரியுமா?

சின்னத்திரையில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவ்வாறு வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் சின்னத்திரையில் பிரபலம் அடைந்துள்ளனர். அந்த பட்டியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை பூஜா. இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை பூஜா, மிகவும் திறமையானவர்.

12 வருடங்களுக்கு முன், நடிகை பூஜா சின்னத்திரையில் சிறந்த வில்லியாக கொடிகட்டி பறந்தார். நாடகம் பார்க்கும் அனைவருக்கும் பூஜாவை நன்றாக தெரியும். இவரை தெரியாத ஆட்களே கிடையாது. சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் பூஜா. தனது 14 வயதில்  சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

இவர் மட்டுமின்றி, இவர் குடும்பத்தினரும் இந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தார்கள். நடிகை பூஜாவின் தந்தை இறந்த பொழுது அவர் ‘கல்கி’ என்னும் சின்னத்திரைத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். பல கஷ்டங்கள் பூஜாவை  துரத்தினாலும், அவர் சின்னத்திரையில் நடிப்பதை கைவிட வில்லை. பல கவலையினால் நடிகை பூஜாவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. ஆனாலும், அந்த விடாமுயற்சியை அவர் கைவிடவில்லை. அதுவே அவரை சின்னத்திறையில் மிகவும்  பிரபலமாக்கியது.

pooja-cinemapettai
pooja-cinemapettai

நடிகை பூஜாவுக்கு, நடிகை குஷ்புவை மிகவும் பிடிக்கும். நடிகை குஷ்பு தான் தனக்கு குங்குமம் என்னும் சின்னத்திரைத் தொடரில் நடிப்பதற்கு வாய்ப்புகொடுத்ததாக கூறுகிறார். அதுமட்டுமின்றி நடிகை குஷ்பு தனக்கு நிறைய ஊக்கம் கொடுத்ததாகவும் மற்றும் அவர் இல்லையேல்  என் நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கும் என்கிறார் பூஜா.

தற்போது பூஜா,தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் தனக்கு என்று ஓர் யூடியூப் சேனல்  வைத்திருக்கிறார். அந்த சேனலில், அவர் நிறைய  மேக்கப் வீடியோக்கள்  போடுகிறார். அதுமட்டுமின்றி (ZEEகன்னடம்)என்னும் தொலைக்காட்சியில் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிகிறார்.இதுமட்டுமின்றி, நடிகை பூஜா தனது சகோதரனுடன் சேர்ந்து ஒரு (ப்ரொடக்ஷன் ஹால்) உற்பத்தி மண்டபம் வைத்திருக்கிறார்.

அதன் மூலம் அவர் படம் தயாரிக்கிறார். அந்தப் படத்தில் நடிக்கும் அனைத்து  நடிகை, நடிகர்களுக்கும் அவரே காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார். இதுபோன்று நிறைய திறமைகள் நடிகை  பூஜாவிற்குள்  இருக்கிறது. சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைவதற்கு ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன் என்று கூறினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்