ஜெய்பீம் பட உண்மை நாயகி செங்கேணிக்கு வீடு கட்டித் தரும் பிரபல நடிகர்.. கஷ்டமான கர்ணனா மாறிடுறாரு!

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் தளத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.

அதுமட்டுமில்லாமல் இருளர் சமூகத்தினரின் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. அவர்கள் மீது காவல்துறையினர் எப்படி மோசமாக நடந்து கொள்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டியது இந்த திரைப்படம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தின் உண்மையான ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி ஆகிய இருவரைப் பற்றியும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த மணிகண்டனுக்கும் ஹீரோயினாக நடித்த லிஜோமோல் ஜோஸ்-க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் எனும் அளவுக்கு ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. இந்நிலையில் உண்மையான செங்கேணி என்ற பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக முன்வந்துள்ளார்.

இதுபோன்று ராகவா லாரன்ஸ் எண்ணற்ற அவருக்கு ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். மற்றொரு நடிகரின் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் ஈகோ இல்லாமல் ராகவா லாரன்ஸ் உதவிசெய்ய முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஜெய் பீம் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்பையும் பாராட்டையும் குவித்து வருகிறது.

house-for-Rajakannus-family
house-for-Rajakannus-family

மேலும் ஜெய் பீம் படத்தின் மூலம் இப்படி ஒரு இனத்தினர் இருக்கின்றனர் என்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது அந்த சமூகத்தினர் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்