தரமான சண்டை காட்சிகளை கொடுத்து அசத்திய 4 ஸ்டண்ட் மாஸ்டர்கள்.. இப்ப இருக்கிற இடமே தெரியலை

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்கள் மாஸ் ஹீரோவாக தங்களது இமேஜை வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் சண்டைப் பயிற்சியாளர்கள். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களை ஊடகங்கள் பெரிதாக காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற சண்டை பயிற்சியாளர்கள் வெளி உலகங்களுக்கு பெரிதாகத் தெரிவதில்லை. தற்போது சினிமாவில் காணாமல் போன சண்டை பயிற்சியாளர்களைப் பார்க்கலாம்.

ஜுடோ ரத்தினம் : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை இயக்குனராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது வயது மூப்பு காரணமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

ராம்போ ராஜ்குமார் : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450 படங்களுக்கு மேலாக திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ராம்போ ராஜ்குமார். இவர் சண்டை பயிற்சியாளர் ரி கே பரமேஸ்வரரின் மகனாவார். ராம்போ செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு உடம்பு சரியில்லாமல் காலமானார்.

ஜாக்குவார் தங்கம் : கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜாக்குவார் தங்கம்.  இவர் ஆறு வயதிலேயே சிலம்பம் கற்கத் தொடங்கினார். ஜாக்குவார் தங்கம் பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றினார். இவர் அமைத்த சண்டை காட்சிகள் ஒரே அடியில் பத்து பேரை அடித்து துவம்சம் செய்யும் வகையில் இருக்கும்.

கனல் கண்ணன் : தமிழ் சினிமாவில் நகைச்சுவையான சண்டை காட்சிகள் என்றால் அது கனல் கண்ணனால் மட்டும் தான் முடியும். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். ரஜினியின் முத்து, கமலின் அவ்வை சண்முகி போன்ற அவரது படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது.

சூப்பர் சுப்பராயன் : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக பணியாற்றியவர் சூப்பர் சுப்பராயன். இவர் கமலின் சகலகலா வல்லவன், ரஜினியின் போக்கிரி ராஜா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சூப்பர் சுப்பராயன் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் கொம்பன், சண்டி முனி, கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார்.