நூல் இழையில் உயிர் தப்பிய சூர்யா.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் சில ஆண்டுகளாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூர்யா, சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அனைவருக்கும் பெரும் தீனி போட்டார். அந்த அளவிற்கு அனைவரும் மெச்சும்படி சூரரைப் போற்று திரைப்படம் அமைந்திருந்தது. தற்போது சூர்யா வாடிவாசல் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் ஷூட்டிங்கின்போது நூலிழையில் உயிர் தப்பியதாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா ‘காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இவ்வாறிருக்க கௌதம் ஒரு பேட்டியில், சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் சிவந்து இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், இதன் காரணமாக காசிமேடு புரோக்கன் பிரிட்ஜ் மீது ஷூட்டிங் நடத்தப்பட்டபோது சூர்யா மயங்கி விழுந்ததாகவும், நூலிழையில் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் பரவி வருவதோடு, கேட்போர் அனைவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

suriya-gvm
suriya-gvm

கௌதம் மேனன் பேட்டி அளித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்