சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

லோகேஷ் உடன் போட்டி போட்டு ஜெயிக்கணும்.. 79 வயது சூப்பர்ஹிட் இயக்குனரின் பேராசை

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன்பிறகு கார்த்தியின் கைதி, தளபதி விஜய்யின் மாஸ்டர், சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெறும் நான்கே படத்தை இயக்கி நான்கு திசைகளையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு போட்டியாக படம் எடுக்க வேண்டும் என தற்போது நடிகராக மாறி இருக்கும் இமய இயக்குனர் பேராசை பட்டிருக்கிறார்.

80-களில் நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, பல கதாநாயகிகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமைக்குரிய இயக்குனர் பாரதிராஜா.

இவர் விக்ரம் படத்தை பார்த்த பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ஐ தன்னுடைய போட்டியாளராக நினைத்திருக்கிறார். மிகப்பெரிய கலைஞானம் உடையவர் லோகேஷ் கனகராஜ் என பாராட்டியும் உள்ளார். சமீபத்தில் தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக பாரதிராஜா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் பயணிக்க வேண்டும் என பாரதிராஜா தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பாரதிராஜா இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போது 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், இரண்டு படங்களுக்கு கதை எழுதி முடித்திருக்கிறார். லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களிடம் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போது தொடர்ந்து பயணிக்க போகிறாராம். இதன்பிறகு இவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாகும் வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

Trending News