லோகேஷ், உங்க இன்ஸ்பிரேஷன் அவர் தான்.. அதற்காக இப்படியா காப்பி அடிப்பீங்க?

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவதாக தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் இவருடைய கடந்த திரைப்படங்களில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் சாயல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இவரின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கும், கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. அதாவது இந்த இரண்டு படங்களிலும் ஹீரோக்கள் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார்கள்.

மேலும் கல்லூரியை சுத்த படுத்துவது, எலெக்ஷன், வில்லன் ஹீரோவை வாத்தி என்று கூப்பிடுவது போன்ற பல ஒற்றுமைகள் இருக்கிறது. இது தவிர இரண்டு படத்திலும் ஹீரோயினும் ஒரு புரோபசர் தான். இதில் விஜய்யை ஜே டி என்று கூப்பிடுவார்கள். அதில் கமலை வி பி என்று அழைப்பார்கள்.

இப்படி நம்மவர் படத்தின் பல விஷயங்களும், மாஸ்டர் படத்துடன் ஒத்து போகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்திலும் இதே போன்ற தற்செயலான பல நிகழ்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை