சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உயிருக்கு போராடிய டான்ஸ் மாஸ்டர்.. விஸ்வாசத்தை மறக்காத தனுஷ்

தற்போது தமிழ் திரையுலகில் பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவசங்கர் மாஸ்டரை தொடர்ந்து அவரது மனைவியும், மூத்த மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த மூவரில் சிவசங்கர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவரது சிகிச்சைக்கு அதிக செலவாகிறது என அவருடைய இளைய மகன் அஜய் முரளி கிருஷ்ணா சமூக வலைத்தளத்தில் உதவி கேட்டுள்ளார். அதில் தன் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவாகிறது என்றும் தங்கள் குடும்பத்தால் அந்த செலவை சமாளிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், நான் ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன் அவரது உயிரை காப்பாற்ற என்னால் முடிந்ததை செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் தனுஷும், சிவசங்கர் மாஸ்டர் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். சிவசங்கர் மாஸ்டர் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படத்தில் மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -