ஐபிஎல் வேண்டாம் சொந்த நாட்டிற்குத் திரும்பும் 4 நட்சத்திர வீரர்கள்.. அணிகளுக்குள் ஏற்படும் மிக பெரிய குழப்பம்!

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க உள்ளது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செய்துள்ளது.

ஆறு இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பார்வையாளர்களுக்கு போட்டியை காண அனுமதி இல்லை. இந்நிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சில முக்கிய வீரர்கள் ஐபிஎல் வேண்டாம் என முடிவெடுத்து சொந்த ஊருக்கே திரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

mitchell-starc-josh-hazlewood
mitchell-starc-josh-hazlewood

ஜோஸ் பிலிப்: பெங்களூர் அணிக்காக விளையாட விருந்த ஜோஸ் பிலிப் அணியிலிருந்து விலகி நாடு திரும்ப உள்ளார். சொந்த நாடு திரும்ப உள்ளார் என விபரம் தெரியவில்லை. இதற்குப் பின்னால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அழுத்தம் இருப்பதாக தெரிகிறது.

ஜோஸ் ஹசில்வூட்: சென்னை அணிக்காக விளையாட இருந்த ஹசில்வூட் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தி இருப்பதாலும் குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடியாது என்பதாலும் நாடு திரும்ப உள்ளார்.

மிச்செல் மார்ஸ்: சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருந்த மிச்செல் மார்ஸ் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மிச்செல் ஸ்டார்க்: பெங்களூர் அணிக்காக விளையாட இருந்த மிச்செல் ஸ்டார்க் அதித விளையாட்டு பளு காரணமாகவும், ஓய்வு வேண்டும் என்பதற்காகவும் நாடு திரும்பியுள்ளார்.

ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு காரணத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்குப் பின்னால் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் போர்ட் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இவர்கள் திரும்பியதாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்