ஏ ஆர் ரகுமானை ஒதுக்கிய இளையராஜா.. வேறொருவரை வளர்க்க போடும் பலே திட்டம்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானும் ஆன இசைஞானி இளையராஜாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி உள்ளார். இளையராஜா கொஞ்சம் தலைக்கணம் பிடித்தவர் என பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

அதற்கு காரணம் தான் இசையமைத்த பாடல்களை ராயல்டி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் அனுப்பி வைத்தார். அப்போது எஸ்பிபி பல கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார். எஸ்பிபி பெரும்பாலும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை தான் பாடுவார். இந்நிலையில் இளையராஜாவுக்கு ராயல்டி கொடுத்தால் தான் அவரது பாடலை பாட முடியும் என்பதால் எஸ்பிபி பெரிய சிக்கலை சந்தித்தார்.

இதனால் நீண்ட வருடங்களாக நண்பர்களாக இருந்த இளையராஜா மற்றும் எஸ்பிபி இருவரும் பிரிந்தனர். ஆனால் தற்போதும் திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் இருக்கும் என பலரும் கூறிவருகின்றனர். எந்த ஒரு கலைஞனும் தன்னை எந்த ஒரு இடத்திலும் விட்டு கொடுக்கமாட்டான்.

அதைத்தான் இளையராஜாவும் செய்து வருகிறார். ஆனால் பலர் இதனை தவறாக பேசி அவரை ஆணவம் உள்ள மனிதனாக சுட்டிக்காட்டி வருகின்றனர் என கூறிவருகின்றனர். இளையராஜா ரசிகர்களை மகிழ்விக்க வெளிநாடுகள் சென்று கச்சேரிகள் நடத்துவார். அதுவும் இளையராஜா நடத்தி வந்த கச்சேரியில் மட்டும்தான் பாடுவார். ஏ ஆர் ரகுமான் கச்சேரியில் கூட இளையராஜா பாடியது கிடையாது.

ஆனால் தற்போது இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடத்தும் கச்சேரியில் இளையராஜா பாடல் உள்ளார். ராக் வித் ராஜா என்ற இந்த இசை நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் இன்று அங்கு நெரிசலை தவிர்க்க போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இளையராஜாவுடன் இணைந்து பாடுவதன் மூலம் தனது கனவு நிறைவேறுவதாகும் கூறினார். அதற்கு இளையராஜா உன்னை மேடையில் சந்திக்கிறேன் என பதிலளித்தார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு தற்போது தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தேவிஸ்ரீ பிரசாத்துடன் அவர் இணைவது ஏ ஆர் ரகுமானை, பழிவாங்குவதற்காகவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.