நீங்க சொல்லுங்க டூட் அகல்யாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஆதித்யா நகைச்சுவை சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் அகல்யா. நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சி மூலம் அகல்யாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் இவருடைய கலகலப்பான பேச்சு எல்லோராலும் ஈர்க்கப்பட்டுள்ளது. அகல்யா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் இவருடைய நிச்சயதார்த்த விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் அகல்யா வெளியிட்டிருந்தார். இவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

அகல்யாவின் வருங்கால கணவர் அருண் சென்னையில் சப் இன்ஸ்பெக்டர் ஆக உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.

vj akalya venkatesan
vj akalya venkatesan

இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவிற்கு இயக்குனரும், நடிகருமான சசிகுமார் வந்து வாழ்த்தினார். இவரை தொடர்ந்து , தீனா, வி ஜே லோகேஷ் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் எப்பொழுது திருமணம் என ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

அகல்யா தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைபடங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் தல அஜித்தின் தங்கையாக நடிக்க அகல்யா ஆசைப்படுகிறாராம் . தற்போது இவரது திருமண செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் அகல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்