நான் என்ன கொலையா செஞ்சேன்! போதைப்பொருள் விவகாரத்தில் மாட்டிய அஜித் பட நடிகர் கோபம்

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக அறிமுகமானார் தான் நடிகர் நவ்தீப். இதனை தொடர்ந்து தமிழில் இளவட்டம், ஏகன், நெஞ்சில் சில் சில், சொல்ல சொல்ல இனிக்கும், அஆஇஈ, இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழைவிட தெலுங்கு சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். கிட்டத்தட்ட தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நவ்தீப் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் போதைப் பொருள் புழக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி சுமார் 30 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட தெலுங்கு நடிகர் மற்றும் நடிகைகள் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

அதன்படி நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தான் நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. எனவே அவரும் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடிகர் நவ்தீப்பிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு நவ்தீப் சரிவர பதிலளிக்காமல், என்னை ஏன் ஒரு கொலை குற்றவாளி போல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

navdeep-drug-abuse
navdeep-drug-abuse

இதனையடுத்து நவ்தீப்பிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை கொடுத்து அதற்கு பதில் எழுதி அனுப்புமாறு கூறியதுடன், மறு விசாரணைக்கு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். போதைப்பொருள் இதுபோன்று தெலுங்கின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் சிக்கி வருவது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்