ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு சிறு சிறு கேரக்டர்களில் தலைகாட்டி வந்த நடிகை தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்தால் நடிகையின் ரேஞ்சே தாறுமாறாக எகிறி விடுமாம்.
அந்த அளவுக்கு நடிகை இந்த படத்தில் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குனருடன் ரொம்பவும் நெருக்கம் காட்டி வருவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் இயக்குனரும் பொதுவெளியில் நடிகையை மிகவும் உரிமையாக ஒருமையில் பேசி வருகிறார்.
மேலும் அவர் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் ரொம்பவும் தாராளம் காட்டி இருக்கிறாராம். இதனால் தற்போது நடிகை தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி விட்டாராம். அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான் இந்த சம்பள உயர்வுக்கு காரணமாம்.
அது மட்டுமல்லாமல் நடிகை தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சம்பள விஷயத்தை பேசிவிட்டு தான் கதையை கேட்க ஆரம்பிக்கிறாராம். அதோடு நடிகை கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்கும் பட்சத்தில் அதிக கவர்ச்சி காட்டவும் அவர் சம்மதிக்கிறாராம்.
இருப்பினும் தயாரிப்பாளர்கள் நடிகை கேட்கும் அத்தனை கோடி சம்பளத்தை கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் நடிகை தன் படம் வெளி வந்தால் பட வாய்ப்பு தானாகவே வந்து குவிந்து விடும் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.