நயன்தாராவுக்கு 4 கோடி, எனக்கு தர மாட்டீங்களா! சம்பளத்தில் கறார் காட்டும் முன்னணி நடிகை

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் நடிகை சமந்தா தற்போது நடிப்பில் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இது தவிர சமந்தா ஆங்கில படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது சமந்தா தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் சமந்தா தேர்வாகியுள்ளார்.

இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா தயாரிப்பாளரிடம் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் சமந்தா கேட்ட அந்த சம்பளத்தையே தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.

இதேபோன்று தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நமக்கு தெரிந்ததே. இவர் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா சிரஞ்சீவிக்கு தங்கையாக மிகவும் குறைவான காட்சியில் நடிப்பதற்கு 4 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

இந்த செய்தி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்தாராவை பார்த்து தான் சமந்தாவும் ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் பெற்றுள்ளதாக தெலுங்கு உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் சமந்தா தன்னுடைய சம்பளத்தை 4 கோடியாக நயன்தாரா அளவுக்கு ஏற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமந்தா தமிழில் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை நயன்தாரா சமந்தா மற்றும் பட குழுவினருடன் இணைந்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்