ரஜினி பட வில்லியை வைத்து ஆட்டம் காமிக்க போகும் பிக் பாஸ்.. சபாஷ் சரியான தேர்வு

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நாள் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கருத்து பலருக்கும் இருந்து வந்தது. இது சம்பந்தப்பட்ட பல யூகங்களும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கமலின் உடல்நிலை சரியாகி அவர் நிகழ்ச்சியை தொடர்வதற்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும். அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அல்லது சிம்பு இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என்ற வதந்தி பரவியது. ஒரு சில சேனல்கள் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஒரு சில ஊடகங்களோ கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும் வெறும் வதந்தியே என்று சற்றுமுன் வந்த தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா கிருஷ்ணன் சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1 டான்ஸ் போட்டியில் நடுவராக இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது 2019 தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார் இதனால் பாஸ் நிகழ்ச்சி எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அவருக்கு நன்றாக தெரியும்.

விஜய் டிவி நிர்வாகம் கமல்ஹாசன் உடல்நலம் தேறி வரும் வரை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவரை அணுகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவருக்கு முன் அனுபவம் இருப்பதாலும் விஜய் டிவியில் கொண்ட நட்புறவாலும் அவர் இதற்கு சம்மதித்து உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் வைல்ட் கார்டு என்ட்ரியின் மூலம் சுவாரசியமாக மாறியுள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதால் நிகழ்ச்சிக்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

ramya-krishnan-cinemapettai
ramya-krishnan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்