கணவரை விவாகரத்து செய்யப் போகும் முன்னணி நடிகை.. இது தனுசை விட பெரிய பஞ்சாயத்து!

சினிமாவில் எவ்வளவு ஆசை ஆசையாக திருமணம் செய்து கொள்கிறார்களே அதை விட வேகவேகமாக இவ்வாறு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிவி நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி சினிமா நட்சத்திரங்கள் ஆக இருந்தாலும் சரி கடைசியில் முடிவது என்னமோ விவாகரத்தில் தான்.

அந்த வகையில் கடைசியாக மொத்த இந்திய சினிமாவையும் பரபரப்பில் ஆழ்த்தியது தனுஷ் விவாகரத்து தான். 18 வருடங்கள் வாழ்ந்து வந்த தன் மனைவியை நொடியில் விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமா முதல் இந்திய சினிமாவைக் கலக்கிய முன்னணி நடிகை ஒருவர் விவாகரத்தில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் பிரபலமான இவர் தமிழிலும் படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் என்ற ஐபிஎல் அணியை நடத்தி வருகிறார். ராஜ் குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்குந்த்ரா சமீபத்தில் இளம் நடிகைகள் மற்றும் பெண்களை வைத்து மோசமான படங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து வந்ததாக ஒரு செய்தி வெளியானதை தொடர்ந்து அது உண்மைதான் என்பது தெரிய வந்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதற்கான விசாரணை கூட தற்போது நடைபெற்று வருகிறது.

தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்த தன்னுடைய கணவர் உடனடியாக விவாகரத்து செய்துவிடும் வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறாராம் ஷில்பா ஷெட்டி. ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவரின் இந்த விவகாரத்துக்கும் என பலமுறை கோர்ட் வாசல் படி ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வெறுத்துப்போன ஷில்பா ஷெட்டி இனிமேல் இவருடன் வாழ முடியாது என்ற முடிவை எடுத்து விரைவில் விவாகரத்துக்கு மேல்முறையீடு செய்ய உள்ளாராம். அடுத்த விவாகரத்தாக  இருக்கப் போகிறது என்கிறது சினிமா வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்