அதை செய்ய சொல்லாதீர்கள் பட்டது போதும்.. இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் நடிகை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை. அவரின் அழகை வர்ணிக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி ஒரு அழகு. அதிலும் நடிகை பெரும்பாலும் ராணி போன்ற கேரக்டரில் தான் நடித்திருப்பார். அதில் உண்மையாகவே ராணி போன்று கொள்ளை அழகில் ஜெலிப்பார்.

இதன் காரணமாகவே நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். உண்மையில் அவர் பீல்டில் இருந்திருந்தால் தற்போது அவர் தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.

ஆனால் சில காரணங்களால் நடிகையால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதுமட்டுமின்றி இறுதியாக நடிகையின் நடிப்பில் வெளியான படமும் சரியாக ஓடாததால் நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இருப்பினும் தெலுங்கில் அவருக்கான மார்க்கெட் இருந்து வந்தது.

அதேபோல் தமிழிலும் பல பட வாய்ப்புகள் நடிகைக்கு தேடி வந்தது. ஆனால் நடிகையோ கதையை கேட்டுவிட்டு தனக்கு ஏற்றமாதிரி இல்லை என கூறி பல படங்களை நிராகத்து விட்டார். தற்போது மீண்டும் நடிகையை தேடி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகிறதாம்.

ஆனால் படத்தில் நடிப்பதற்கு நடிகை இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்டு வருகிறாராம். அதன்படி நடிகை உடல் எடையை குறைக்கவோ, ஏற்றவோ மாட்டேன். படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களுக்கு பல நிபந்தனைகள் போடுகிறாராம். மீண்டும் அவரை தேடி வாய்ப்புகள் வரும் நிலையில் நடிகை இப்படி கண்டிஷன் போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்