Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

80s ரியூனியனுக்கு அழைக்காத பிரபல நடிகர்.. எல்லாம் அந்த நடிகையால் தான்

தமிழ் சினிமாவில் மிக உயரத்திற்கு எடுத்துச் சென்ற காலம் என்றால் அது எண்பதுகள் தான். அப்போது உள்ள நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று சொல்லலாம். தற்போது இவர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை என எல்லா திரைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு வருடமும் ரீயூனியன் பங்க்ஷன் நடத்தி வருகின்றனர். 80s ரியூனியன் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் போது எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடை அணிந்திருப்பார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமா நடிகர், நடிகைகளும் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் சமீபத்தில் 80s ரியூனியன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ராம் சரணும் கலந்து கொண்டார்.

மேலும் பாக்யராஜ், ரமேஷ் அரவிந்த், ரகுமான், பிரபு, பாக்கியராஜ், சரத்குமார், ராதிகா, மோகன்லால், சிரஞ்சீவி, நாகார்ஜுனா குஷ்பு, ஜெயராம், நாகர்ஜுனா, நதியா, ரேவதி,சுஹாசினி, அம்பிகா, அமலா, சோபனா போன்ற பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பிரதாப் போத்தன் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதாவது இந்நிகழ்ச்சிக்கு பிரதாப் போத்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லையாம். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பிரதாப் போத்தன். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவரை இந்நிகழ்ச்சிக்கு அழைக்காதத காரணம் என்ன என்று பலரும் வினவிவருகின்றனர்.

மேலும் பிரதாப்போத்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நான் ஒரு கெட்ட நடிகர் என்பதால் என்னை யாரும் அழைக்கவில்லை என மனவருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இவர் ராதிகாவின் முதல் கணவர் என்பதால் தான் யாரும் இவரை அழைக்கவில்லை என்றும் இதற்கு காரணம் ராதிகா எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top