ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கமல் வாரிசாக வளர்ந்து வரும் நடிகர்.. நடிப்பு பசியால் 40 மொழி படங்களையும் விடுவதில்லை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதுமையை காட்டி மக்களை கவர்ந்து வரும் கமல் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் பிரம்மிக்க வைத்திருக்கிறார். இந்த வயதிலும் அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வமும் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணமும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அவருக்கு இந்த வெற்றி எல்லாம் போதாது என்பதைப் போல இன்னும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கமலுக்கு வாரிசு என்று சொல்லும் வகையில் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் யாரென்றால் மலையாளத் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள பகத் பாசில் தான்.

பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி வந்த இவர் விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். நடிப்பில் பல வித்தியாசங்களை காட்ட வேண்டும் என்று நினைக்கும் அவர் புதுசு புதுசாக ஏதாவது செய்து கொண்டே இருப்பாராம்.

அந்த வகையில் இவர் நடிப்பு, புது டெக்னாலஜி, ஹாலிவுட் படங்கள் உட்பட அனைத்து மொழி படங்களையும் ரெஃபரென்ஸாக எடுத்துக் கொள்கிறாராம். அந்த அளவுக்கு நடிப்பு பசியில் இருக்கும் இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஒரிஜினாலிட்டியை கொண்டு வருவதற்கு ரொம்பவே மெனக்கெடுவாராம்.

இந்த விஷயம் தான் அவரை மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உட்பட அனைவரும் கொண்டாடுவதற்கு காரணமாக இருக்கிறது. அந்த படத்தில் அப்படி நடந்தது, அதனால் நாம் அப்படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு மொழியில் வரும் படங்களை பின்பற்றி வருவது தான் இவருடைய வழக்கம்.

அந்த விதத்தில் இவர் 40 மொழி படங்களையும் பார்த்து எதையாவது கற்றுக் கொள்வாராம். அவருடைய இந்த அர்ப்பணிப்புதான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் தான் ரசிகர்கள் தற்போது இவரை கமலின் வாரிசு என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News