சர்கார் படத்தில் என்னோட ரோல் ரொம்ப மோசம்.. 3 வருடம் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஷாக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்ததோடு, பாக்ஸ் ஆபீசை குவித்ததால் தியேட்டர் ஓனர்கள் இவரை ‘பாக்ஸ் ஆஃபிஸ் சக்கரவர்த்தி’ என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.

மேலும் விஜய் அடுத்ததாக தனது 65வது படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் விஜயின் சர்க்கார் படத்தில் தனக்கு கிடைத்த ரோல்  மிகவும் மோசமான ரோல் என்று  தமிழ் சினிமாவின் பிரபல மூத்த  நடிகரான ராதாரவி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் தகவல்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தளபதி விஜய் நடிப்பில் கடந்த  2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் தான் ‘சர்கார்’. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மேலும் 110 கோடி செலவில்  தயாரான இந்தப் படம், உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

இப்படி இருக்க சர்கார் படத்தில் தான் நடித்த ரோல் அவ்வளவு பெரிய ரோல் கிடையாது என்று ராதாரவி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ராதாரவி தனது ரோலின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்த இயக்குனரிடம் கதையில் ஒரு சிறு மாற்றத்தை செய்ய சொல்லியும் கேட்டாராம்.

அது என்னவென்றால் சர்கார் படத்தில் முதலமைச்சராக இருக்கும் தந்தையை கொல்லும் மகள் என்ற ரோலை மாற்றி, ராதாரவி முதல்வரை கொன்று அந்த இடத்தை பிடிப்பது போன்று  கதையை அமைக்குமாறு கேட்டாராம். ஆனால் இதற்கு முருகதாஸ் ஒப்புக் கொள்ளவில்லையாம். அப்படி அமைத்திருந்தால் கதையில் அவருடைய ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார் ராதாரவி.

எனவே, சர்கார் படத்தை பற்றி அந்தப் படத்தில் நடித்த மூத்த நடிகர் கூறியிருக்கும் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

- Advertisement -