தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல முன்னணி நடிகர்.. நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு, ஏன் இந்த திடீர் முடிவு!

சகோதரர்களான இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணையும் படம் நானே வருவேன். முன்னதாக இவர்கள் இருவரும் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ள இந்தக் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பும், கதைக்களமும் முழுவதுமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு படக்குழுவின் தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் இந்த படத்தின் புதிய தலைப்பு ராயன் எனவும், புதிய கதைக்களம் ராயபுரத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vishnu vishal
vishnu vishal
- Advertisement -