அஞ்சலிக்காக இயக்குனரை பகைத்துக் கொண்ட ஜெய்.. பிரேக்கப்புக்கு இப்படி ஒரு காரணமா.?

தளபதி விஜய்யின் பகவதி திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சென்னை 28, கோவா, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இவர் தன்னுடன் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை அஞ்சலியை காதலித்தார். தீவிரமாக காதலித்த இருவரும் ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு நெருக்கமாக பழகி வந்தனர்.

ஒருமுறை நடிகர் ஜெய், அஞ்சலியுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த பொழுது அந்தப் படத்தின் இயக்குனர் அஞ்சலியை நீ, வா, போ என்று ஒருமையில் பேசியுள்ளார். அதை கண்டு ஜெய் மிகுந்த கோபம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அவர் அந்த இயக்குனரை அடிக்க பாய்ந்துள்ளார்.

இதனால் பதறிப்போன படக்குழுவினர் உடனே ஜெய்யை சமாதானபடுத்தி உள்ளனர். இப்படி ஒரு சம்பவம் எங்கேயும் எப்போதும் படப்பிடிப்பில் தான் நடந்தது என்றும், அப்படத்தின் இயக்குனருடன் தான் ஜெய் சண்டையிட்டார் என சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு ஜெய், அஞ்சலியின் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தார். இவர்களுடைய காதல் செய்தி பலருக்கும் தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக அஞ்சலி, ஜெய்யுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டார்.

நடிகர் ஜெய்க்கு இருந்த அதிக குடிப்பழக்கம் தான் இந்த காதல் முறிவுக்கு காரணமாக சொல்லப்பட்டது. அஞ்சலி எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜெய் குடிப்பழக்கத்திலிருந்து மீளாததால் தான் அவர் தன் காதலை முறித்துக் கொண்டார்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஜெய் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு பிரச்சனையில் இருந்து ஓரளவு மீண்டு வந்து தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை