சிம்புவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்.. ஏம்பா இந்த கொலவெறி!

பல சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு பின்னர் தற்போது தான் நடிகர் சிம்பு கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அடுத்தடுத்து தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வரும் சிம்பு தற்போது இயக்குனர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு நதியினிலே நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும், தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் திருச்செந்தூரில் நடக்க இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படப்பிடிப்பு நடத்தக்கூடாது என மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பணத்தை தரவேண்டும். அதைத் தரும் வரையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க கூடாது எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

simbu-micheal-rayappan
simbu-micheal-rayappan

விஸ்வரூப வளர்ச்சியாக வளர்ந்து வரும் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முட்டுக் கட்டையாக இருக்கும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சிம்பு இதற்கெல்லாம் அசர மாட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -