Aavesham Movie Review – புலிக்கு பயந்து சிறுத்தையிடம் மாட்டிய கதை தான்.. சிரிப்பு வில்லன் பகத் பாசிலின் ஆவேசம் பட விமர்சனம்

Aavesham Movie Review : நடிப்பு அரக்கன் பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஆவேசம் படம். இந்த வருடம் மலையாள படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூருக்கு மாணவர்கள் படிக்க வருகின்றனர். அந்த பொறியியல் கல்லூரியில் சீனியரால் மூன்று மாணவர்கள் ராகிங் செய்யப்படுகின்றனர். இந்த சீனியரை எதிர்க்க வேண்டும் என்றால் உள்ளூர் ரவுடி ஒருவரின் நட்பால் மட்டும் முடியும் என மாணவர்கள் முடிவெடுக்கின்றனர்.

அதன் பின்பு ஒவ்வொரு ரௌடியாக ரங்கா, அதாவது பகத் பாசிலின் நட்பு கிடைக்கிறது. அவருடன் மாணவர்கள் நெருங்கிப் பழக பகத்பாஸிலும் இவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைக்கிறார். கடைசியாக பகத் பாசிலின் மூலம் சீனியரை அடித்து கல்லூரியில் அந்த மாணவர்கள் பிரபலமாகிவிட்டனர்.

கேங்ஸ்டராக சிரிக்க வைத்த பகத் பாசில்

ஆனால் புலிக்கு பயந்து சிறுத்தை கையில் மாட்டியது போல் பகத் பாசிலால் இந்த மூவரும் வேறு ஒரு பிரச்சனையை சந்திக்கின்றனர். அது என்ன பிரச்சனை அதிலிருந்து எப்படி வெளி வருகிறார்கள் என்பது தான் ஆவேசம் படத்தின் கதை.

படத்தில் பிளஸ் என்றால் கேங்ஸ்டராக இருக்கும் பகத் பாசில், ரவுடியா என்று யோசிக்கும் அளவுக்கு காமெடி செய்கிறார். ஆனால் அடுத்த நொடியே மிரள வைக்கும் அளவுக்கு கொடூரத்தை காட்டிவிடுகிறார். இதுவரை வெளியான கேங்ஸ்டர் படங்களில் வித்தியாசமான கதையாக வெளியாகியுள்ளது ஆவேசம்.

ரங்காவின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மட்டும் ஏற்புடையதாக இல்லை. மேலும் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் காமெடியுடன் சேர்ந்து ஆக்சன் காட்சியாக அமைந்திருக்கிறது. மொதத்தில் ஆவேசம் படம் செம ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்