இது என்னடா பிரபல நியூஸ் சேனலுக்கு வந்த சோதனை.? வறுத்தெடுக்கும் நெட்டிசன்களின் வீடியோ

செய்தி சேனல் என்றாலே எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பெரிதுபடுத்தி கிண்டலும் கேலியுமாக வழங்குவது இயல்பு தான். ஆகையால் பிரபல செய்தி சேனலில் ஒன்றாக விளங்கும் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு செய்தி தொகுப்பாளரின் இரண்டு நிமிட வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் அதிகமாக கேட்கப்படும் வேல்ராஜ் என்ற செய்தியாளரின் குரலுக்கும், அவர் வாசிக்கும் மாடுலேஷனுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அத்தகைய பாலிமர் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்த வீடியோவில் செய்திவாசிப்பாளர் எதுவும் பேசாமல் தன்னுடைய தொலைபேசியை பார்த்துக்கொண்டும், அதன் பின் எழுந்து தன்னுடைய முடியையும் புடவையையும் சரி செய்துள்ளார்.

இதை பாலிமர் நியூஸ் சேனல் லைவ் டெலிகாஸ்ட் செய்துள்ளது. கிட்டத்தட்ட 2 நிமிடம் செய்திவாசிப்பாளர் நேரலையில் எதுவும் பேசாமல் இருந்ததை அங்குள்ள யாரும் கவனிக்கவில்லை? என்று கேள்வி பெரும்பாலானோர் சோசியல் மீடியாக்களில் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஏண்டா பொய் செய்தி எதுவும் கிடைக்கலையா? என்றும் இந்த வீடியோவை பார்த்தபின் கமெண்ட் அடிக்கின்றனர். மேலும் ஒரு சிலர் செய்தி வாசிப்பின் போது இதுபோன்ற சிறுசிறு தவறுகள் நடப்பது இயல்புதான் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=7rm8q7Pljf4&feature=youtu.be

வழக்கமாக பலரை வச்சு செய்த பாலிமர் தொலைக்காட்சியை தற்போது சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் தரமாக வச்சு செய்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்