100 கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்.. உச்சகட்ட கோபத்தில் அர்ஜுன் நடத்திய பிரஸ்மீட்

தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த அர்ஜுன் தற்போது வில்லன் போன்ற அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் தீயவர் குலைநடுங்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் டைரக்சன், தயாரிப்பு போன்ற பன்முக திறமை கொண்டவர்.

தற்போது இவர் தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் தன் மகளை தெலுங்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Also read:சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

அதற்காக ஒரு படத்தை தானே இயக்க முன் வந்துள்ள அர்ஜுன் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்நிலையில் அர்ஜுன் தற்போது ஒரு பரபரப்பு பிரஸ்மீட் நடத்தி இருக்கிறார். அதில் ஹீரோ விஸ்வக் சென் குறித்து பல புகார்களை அவர் அடுக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என் மகளை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதற்காக விஷ்வக் சென்னை நடிக்க கேட்டபோது அவரும் படத்தில் நடிக்க சம்மதித்தார்.

அதற்காக அவர் கேட்ட சம்பளத்தையும் நாங்கள் கொடுப்பதற்கு முன் வந்தோம். ஆனால் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் நேரத்தில் ஜெகபதிபாபு உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் ஹீரோ மட்டும் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள நாங்கள் பலமுறை முயற்சி செய்தும் சரியான பதில் கிடைக்கவில்லை.

Also read:4 ஹிட் படங்களின் வில்லன் கதாபாத்திரத்தை மிஸ் செய்த அர்ஜுன்.. இப்ப தேம்பித் தேம்பி அழுது என்ன பிரயோஜனம்

என் வாழ்க்கையில் நான் அவருக்கு போன் செய்தது போல் வேறு யாருக்கும் இத்தனை முறை கால் செய்தது கிடையாது என்று அர்ஜுன் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்கள் பலரும் நடிப்பு என்று வந்துவிட்டால் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வார்கள்.

ஆனால் விஷ்வக் சென் அப்படி கிடையாது. அதனால் இப்படிப்பட்ட ஒரு நடிகரை என் படத்தில் நடிக்க வைக்க நான் விரும்பவில்லை. அவருக்கு பதில் வேறொரு நடிகர் இந்த படத்தில் நடிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் விஷ்வக் சென்னுடன் இணைந்து ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். அர்ஜுன் நடத்திய இந்த பிரஸ் மீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read:அர்ஜுன் போலீசாக நடித்து மரண ஹிட் அடித்த 6 படங்கள்.. உலக நாயகனை மிஞ்சிய ஆக்சன் கிங்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்