வாயால் கெட்ட தூங்குமூஞ்சி அஸ்வின்.. தியேட்டர் போயி, OTT போயி, இனி டிவிதான் போல

குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் இன்று தூங்கிவிட்டேன் என்று சொன்ன ஒரு வார்த்தையால் பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தற்போது அஸ்வின் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் நான் இதுவரை 40 கதைகளை கேட்டேன். அந்த கதைகளை கேட்கும் போதே நான் தூங்கிவிட்டேன் என்று பேசியதைக் கேட்டு தமிழ் திரையுலகமே கொந்தளித்தது.

மேலும் அவர் பேசிய பேச்சால் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத அஸ்வின் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக இருந்த அந்த திரைப்படம் வெளியிட முடியாமல் தள்ளிப்போனது.

அஸ்வினுக்கு திரையுலகில் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியதால் தற்போது படத்தை வெளியிடுவதற்கு தயங்கிய படக்குழு படத்தை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர். ஆனால் அதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

படத்தை இப்போது தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் தயங்கி வருகிறார்கள். இது தவிர கொரோனாவின் காரணமாக ஊரடங்கு போடப்படும் பிரச்சனைகளும் இருப்பதால் தயாரிப்பாளர் படத்தை ஓடிடி யில் வெளியிட யோசித்து வருகிறாராம்.

அதனால் இனிமேல் படம் வெளியானால் அது ஓடிடி யில் மட்டும் தான் வெளியாகும். அதுவும் இல்லை என்றால் இனி டிவி தானாம். சில நாட்களுக்கு முன் அஸ்வின் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில், படம் சில நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் நிச்சயம் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு நம்பிக்கையுடன் பேசிய அஸ்வின் தயாரிப்பாளரின் இந்த முடிவால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்