விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம்.. தமிழக முதல்வரின் அசத்தலான அறிவிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஏனென்றால் விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்ற அசத்தலான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தும், புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கியும், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க தமிழக முதல்வர், தற்போது கூடுதலாக இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று தற்போது அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

admk-edappadi-jayakumar
admk-edappadi-jayakumar

மேலும் விவசாய குடும்பத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் விவசாயிகளின் வேதனையைப் புரிந்து, அதற்கேற்ற பல நல்ல திட்டங்களை வகுத்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் பலர் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்