24 மணி நேரத்தில் 5 முறை தேர்தல் அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி.. இன்ஸ்டால்மெண்டில் அறிக்கையா.?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து முறை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருப்பதைப் பார்த்த நெட்டிசன்களுக்கு இச்செய்தி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

மேலும் இந்த தேர்தல் அறிக்கைகளை பார்த்த நெட்டிசன்கள் திமுக நினைத்து நினைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதும், கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தில் துணை தேர்தல் அறிக்கை, கூடுதல் தேர்தல் அறிக்கை என தவறை மறைக்க புது ட்ரெண்டிங்கில் இறங்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதாவது திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு டி ஆர் பாலு தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்தது. அதேபோல் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இவ்வளவு ஏன் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் வரும் ஆண்டுகளில் திமுக  செயல்படுத்த உள்ள திட்டங்களை ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது தேர்தல் அறிக்கையின் முக்கிய விஷயங்களை பட்டியலிட்டார். அதில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததால் கூட்டணி கட்சியில் உள்ள சிறுபான்மையினர் கட்சிகள் திமுகவிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அவசரஅவசரமாக இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை ஒரு நாளுக்கு பிறகு திமுக வெளியிட்டது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து முறை மாற்றி மாற்றி தேர்தல் அறிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களில்  மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் ஸ்டாலினை கிண்டலடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெளியிட்ட ஐந்து அறிக்கைகளையும் ஒரே தேர்தல் அறிக்கையாக வழங்க வேண்டும் என சில செய்தியாளர்களும் பத்திரிக்கையாளர்களும் திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

எனவே இப்படி இன்ஸ்டால்மெண்டில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருவது அந்த கட்சிக்கு நல்லதல்ல என விபரமறிந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -