பேரிடர் காலத்திலும் தமிழகத்தை தொழில் துறையில் முன்னேற்றி சாதனை புரிந்த எடப்பாடியார்.. குவியும் பாராட்டுக்கள்

தமிழகத்தில் தற்போது எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. இவரது நலத்திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தற்போது தமிழகம் மருத்துவத்துறை, வேளாண் துறை, மகசூலை அதிகரிப்பது, நீர் மேலாண்மை ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடியார், இந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கூட பல தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்றி காட்டி இருக்கும் தகவல்கள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, அரசின் சார்பில் கடந்த ஆண்டில் மட்டும், ரூபாய் 66 ஆயிரம் கோடி முதலீட்டில் பல நிறுவனங்களுடன் 80 புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட பட்டதாகவும், இதன் மூலம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், கேர் ரேட்டிங் இன் அடிப்படையில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முழு முக்கிய காரணம் எடப்பாடியாரின் அதிரடியான நடவடிக்கைகள்தான்.

ஏனென்றால், சேலத்தில் 2500 கோடி முதலீட்டில் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஏரோஸ்பேஸ் கிளஸ்டர் பார்க் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடியார். அதோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் அமெரிக்க கம்பெனியுடன் மற்றொரு புத்துணர்வு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளார்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் 320 கோடி ரூபாய் முதலீட்டில்  300 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், குரூட்  இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியுடன் திட்டம் தீட்டியுள்ளார்.

இவ்வாறு எடப்பாடியார் பல முதலீடுகளை ஈர்த்தன் காரணமாக, தற்போது  தமிழகம் தொழில் துறையில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் எடப்பாடியாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்