அதிமுகவை விடாமல் துரத்தும் ஸ்டாலின்.. எடப்பாடி மீது 4 பிரிவின் கீழ் வழக்கு, எதற்கு தெரியுமா.?

அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு எந்த ஒரு அரசியல்வாதியும் இதைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர் தற்போது எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சி வழக்கு போட்டுள்ளது.

ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் மேலும் தினந்தோறும் ஏதாவது ஒரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் அரசியல்வாதிகள் பொருத்தவரை எப்போதுமே ஒரு பக்கம் எதிர்ப்பு இருக்கும் ஒரு பக்கம் வரவேற்பு இருக்கும் .

ஸ்டாலின் பதவியேற்ற போது அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றாக வைத்து பதவி ஏற்றுக்கொண்டார் அப்போது பலரும் ஸ்டாலின் யாரையும் எந்தவிதமான வேறுபாடும் பார்க்காமல் ஒற்றுமையுடன் அழைத்தார் என பலரும் கூறிவந்தனர். ஆனால் ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு காரணம் இருப்பது என்பது பலருக்கும் தெரியவில்லை.

அதாவது ஒருபக்கம் தோள்பட்டையில் தட்டி கொடுக்கவேண்டும் மற்றொரு பக்கம் தடுக்கி விட வேண்டும் என்பதுதான் அரசியலில் வழக்கம் அதைத்தான் தற்போது பல அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர். அதாவது எதிர்க் கட்சி ஆட்சியில் இருந்தபோது என்னென்ன துன்பங்கள் சந்தித்தார் ஸ்டாலின் இப்போது அவர்களுக்கு அமைதியான முறையில் பதிலடி கொடுத்து வருகிறார்.

அதாவது எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி 90 உறுப்பினர்களுடன் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தியது தவறு என எடப்பாடி பழனிச்சாமி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு போடுவதும் அது ஒரு சில நாட்களில் மறந்து போவதும் வழக்கமான ஒன்றுதான் இதனால் இவர் மேல் போட்ட வழக்கு எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

stalin-edappadi

அதுமட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதி மீது பல வழக்குகள் உள்ளன இதனையெல்லாம் விசாரணை செய்தால் ஒரு அரசியல்வாதி கூட இருக்க மாட்டார்கள். இது எல்லாம் சும்மா ஏதாவது போராட்டம் செய்ய வேண்டும் என்பதற்காக செய்வது போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -