எதிர்க்கட்சியை தனது விமர்சனங்களால் சரமாரியாக தாக்கிய எடப்பாடியார்.. அனல் பறக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுக-விற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது எதிர்க்கட்சியை பெருமளவு விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த தேர்தல் பரப்புரையின் போது, தான் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறிவருவது தவறானது என்றும், தான் எம்எல்ஏவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் கூறி ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மக்களைப் பற்றி இவ்வளவு அக்கறையாக பேசும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது மக்களின் குறைகளை   தீர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக பேசிய எடப்பாடியார், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

எனவே, இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரை எடப்பாடியார் சரமாரியாக தனது விமர்சனங்களால் வெளுத்து வாங்கிய தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்