சாக தான் வேண்டும்.. டிராவிட், கங்குலியால் மிரட்டப்பட்ட சீனியர் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அணியில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றதில் இருந்தே இத்தகைய பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது.

இந்திய அணித் தேர்வில் பல மாறுதல்கள், கேப்டன் பொறுப்பு மாற்றியமைத்தது, சீனியர் வீரர்கள் பிரச்சனை, தென்னாபிரிக்கா தொடர் தோல்வி என பல பிரச்சினைகள் இந்திய அணியை வாட்டி வதக்கி வருகிறது.

இப்பொழுது பூதாகரமாக அடுத்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது இந்திய அணி. அது மூத்த வீரர் விருத்திமான் சாஹாவால் வந்த புது பிரச்சனை. சாஹா, சமீபத்தில் அளித்த ஒரு புகாரில் இந்திய அணியிலிருந்து வேண்டுமென என்னை புறக்கணிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஓய்வு எடுக்குமாறு வற்புறுத்தியதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சாஹா. இனி உங்களை அணியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்களாகவே உங்கள் ஓய்வு முடிவை அறிவித்து விடுங்கள் என கூறியதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும் தன்னை அணியில் இனிமேல் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார் சாஹா.

பிசிசிஐயுடன் ஒப்பந்தம் போடப்பட்ட வீரர் சாஹா. ஆனால் வீரர்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் நடைபெறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. உடனடியாக இந்த விஷயத்தில் பிசிசிஐ தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான தனி ஒரு குழுவையும் அமர்த்த வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அவர்கள் கூறி வருகின்றனர்.