வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் நடிகை.. சீக்ரெட்டாக வெளிவந்த ஜெயிலர் அப்டேட்

ரஜினி தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டாரை பல வருடங்களுக்கு பிறகு திரையில் இரட்டை வேடத்தில் வெகு விரைவில் காண போகிறோம், மேலும் அந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணையும் நடிகையால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பில்லா, போக்கிரி ராஜா, அதிசய பிறவி, தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, மூன்று முகம் என பல படங்களில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய இரட்டை வேட படங்களில் முத்திரை பதித்தவை என்றால் அது நெற்றிக்கண், எந்திரன் படங்கள் தான். ரஜினிக்கு ரஜினியே வில்லனாக மோதுவது என்றால் திரையே தீ பிடிக்கும். இந்த படத்தில் அவருடைய டூயல் ரோல் எப்படி இருக்கும் என தெரியவில்லை.

சமீப காலங்களில் ரஜினி இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கபாலி, காலா, பேட்டை , அண்ணாத்தே என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் பணியாற்றிய ரஜினி, தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த ஜெயிலர் படத்தில் தான் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும், அதில் இளம் வயது ரஜினிக்கு தமன்னா ஜோடியாகவும், வயதான ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் புதிய அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. இது ரஜினியின் 169 வது படமாகும். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன.

ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணனுக்கு இது இரண்டாவது படம் ஆகும். ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் படையப்பா ஆகும். இதில் ரம்யாகிருஷ்ணன் நீலாம்பரியாக ரஜினிக்கு வில்லியாக மிரட்டி இருப்பார். இதைத் தவிர ஐஸ்வர்யா ராய் இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

தானாக வந்து அப்டேட் கொடுத்த ரஜினி: டெல்லியில் ஆளுநரை சந்தித்து வந்த கையோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தார் சூப்பர் ஸ்டார் . ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதால் அங்கே செட் போட்டுவிட்டதாகவும், மழைக்காலம் ஆரம்பித்தால் செட் பாழாகிவிடும் என்பதால் மழைக்கு முன்பே ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டம் வகுத்து இருப்பதாகவும், அதனால் இந்த ஆகஸ்ட் 15 சூட்டிங் ஆரம்பிக்க போகிறோம் என பத்திரிக்கையாளர்களிடையே கூறினார். படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

Trending News