மிக்ஜாம் புயல் பிக்பாஸிலும் எதிரொலி.. எலிமினேஷனை குறித்து ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

Bigg Boss Season 7 Elimination: காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா,  விசித்ரா, மணி, நிக்சன், தினேஷ் போன்ற ஐந்து பேர் இடம் பெற்றனர். இதில் மாயா, பூர்ணிமா, ரவீனா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெறாமல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடே நிக்சனை தான் டார்கெட் செய்தது. கடந்த வாரம் கேப்டனாக இருந்து எஸ்கேப் ஆன நிக்சன் இந்த வாரம் அதிர்ஷ்டவசமாய் மிக்ஜாம் புயலால் தப்பித்து விட்டார். மக்கள் அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் நிக்சன் தான் கடைசி இடத்தில் இருந்து நிலையில், அவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு கிளம்புவதாக இருந்தது.

ஆனால் சற்று முன் வந்த தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் அதிக அளவு ஓட்டுக்களை போட முடியவில்லை. அதனால் இந்த வாரம் ‘நோ எலிமினேஷன்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நிக்சனை விஜய் டிவி காப்பாற்ற பார்க்கிறதா? என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also read: அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிக்சன் 

நான்கு மாவட்டங்கள் மட்டும்தான் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதனால் அங்கிருந்து மட்டும்தான் ஓட்டுக்கள் வந்திருக்காது. மற்ற மாவட்டங்களில் இருக்கும் பிக் பாஸ் ரசிகர்கள் கண்டிப்பாக ஓட்டுகளை அளித்திருப்பார்கள். அதனடிப்படையில் நிக்சனை எலிமினேட் செய்திருக்கலாம் என்று விஜய் டிவியை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

இந்த சீசனில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கிறது. அந்த வகையில் இப்போது நிக்சனையும் மிக்ஜாம் புயலை காரணமாக காட்டி வெளியேற்றாமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அதிலும் இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் நிக்சன் கொஞ்சம் ஓவராகவே தவ்வுகிறார். 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் தான் பிக் பாஸ் வீடு நாசமா போச்சு என்றும் அதிரடியாக குற்றம் சாட்டுகிறார்.

அவர் அர்ச்சனா மற்றும் தினேஷ் மீது கொலவெறியுடன் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரமும் அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்தால் டிஆர்பி ஏறும் என்பதற்காகவே விஜய் டிவி இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறது.  

Also read: தளபதி 68 பட வாய்ப்பு பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி