தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், அதன்பின் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் இதனிடையே கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமன பெண்ணே என பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தற்போது நூறுகோடி வானவில் மற்றும் டீசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஹரிஷ் கல்யாண் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

Also Read : மணமேடையில் மனைவிக்கு முத்தமிட்ட ஹரிஷ் கல்யாண்.. இணையத்தை அலங்கரிக்கும் திருமண புகைப்படங்கள்

இதனிடையே அண்மையில் நர்மதா என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புகைப்படத்தை பதிவிட்டு இருந்த நிலையில், சமீபத்தில் சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

மேடையிலேயே தனது மனைவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த ஹரிஷ் கல்யானின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ஹரிஷ் கல்யாண் திருமணமான அடுத்த நிமிடமே அவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு வந்துள்ளது.

Also Read : சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

கிரிக்கெட் வீரர் டோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இவரது முதல் திரைப்படமே தமிழ் திரைப்படம் தான் என்ற நிலையில், நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தனது முதல் படத்தை தயாரிக்கப் போவதாக தோனியின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சாக்லேட் பாயாக வலம் வந்து ஒரு காதல் திரைப்படத்தை தயாரிக்கலாம் என இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

Also Read : நெஞ்சுக்கு நீதி பிரபலத்துடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. எதிர்பாராத கூட்டணி