பிக்பாஸ் நடிகையை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. நம்மாளுக மோசம்பா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மாடல் நடிகை தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அளித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஆனால் இதற்கெல்லாம் முதன்மையை ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஹிந்தியில் கிட்டத்தட்ட 15 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அந்த பிக் பாஸ் 15 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் மாடல் அழகி டோனல் பிஸ்ட்.

தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதும் அவருடைய பழைய வீடியோ ஒன்றில் தன்னை தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கை அழைத்ததாக கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

donal bisht
donal bisht

அதில் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதிக்கும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இதுதான் எனவும், பட வாய்ப்பு தருகிறேன் என அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் பழக்கம் இன்னமும் இருந்துதான் வருகிறது என வேதனைப்பட்டு பேசியுள்ளார். யாரும் அவசரப்பட்டு இந்த மாதிரி வலைகளில் சிக்க வேண்டாம் எனவும் பொறுமையாக இருந்தால் தங்களுக்கான வாய்ப்பு தானாகவே தேடி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்