உனக்கு நெஜமாவே அது இருக்கா.? நயன்தாராவை அவமானப்படுத்திய பிருந்தா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நயன்தாரா திரையில் வந்தபோது அவரது முகம் கவர்ச்சிக்கு செட்டாகவில்லை என பலரும் அவரை ஓரம் கட்டினர். இதனிடையே உடலை குறைத்துக்கொண்டு நடித்தால் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன் என நயன்தாரா பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார் என்று சொல்லலாம்.

அப்படி நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்த திரைப்படத்தில் ஒன்று தான், நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்கிய பிரபுதேவா, நயன்தாராவிற்கு எந்த ஒரு கதையும் கொடுக்காமல் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வலம்வர செய்திருப்பார்.

Also Read : நயன்தாராவால் மருத்துவமனைக்கு சீல்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என எஸ்கேப்

இதனிடையே 2009 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீஸான வில்லு படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா, விஜய், பிரபுதேவா உள்ளிட்டோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் போனில் பேசினர். அப்போது பலரும் தொடர்பு கொண்டு வில்லு படத்தை பற்றியும் விஜய், நயன்தாராவின் நடிப்பை பற்றியும் பேசினர்.

அச்சமயத்தில் நடன இயக்குனர்களான கலா மாஸ்டரும், பிருந்தா மாஸ்டரும் தொடர்புகொண்டு விஜயையும், வில்லு திரைப்படத்தையும், நயன்தாராவையும் புகழ்ந்து தள்ளினர். இதில் முக்கியமாக பிருந்தா மாஸ்டர் பேசியபோது, நயன்தாரா ஏன் இவ்வளவு சைலண்டாக இருக்கிறாய் எனக் கேட்கிறார்.

Also Read : நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்

உடனே நயன்தாரா குபீரென சிரித்து, நான் எப்போதும் இப்படி தான் தெரியாதா உங்களுக்கு என பதில் கூறுகிறார். உடனே அதற்கு பதிலளித்த பிருந்தா மாஸ்டர், நயன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்க உன்னுடைய நிஜ முகத்தை காட்டு என கலாய்த்து தள்ளினார். உடனே நயன்தாரா என் மானத்தை வாங்காதீர்கள் என சொல்ல, மானமா அப்படினா என பிருந்தா மாஸ்டர் நயன்தாராவை லைவில் அவமானபடுத்தும் வகையில் பேசினார் .

உடனே நயன்தாராவும் தயவுசெய்து இவர்களது போனை கட் பண்ணுங்கள் எனக் தொகுப்பாளினியிடம் கூற, நீ எப்போதுமே நல்ல பெண்தான் என்று பிருந்தா மாஸ்டர் பிளேட்டை மாற்றிவிட்டு சென்றார். அந்த லைவ் இன்டெர்வியூவில் நயன்தாராவின் வாய்தான் சிரிக்கிறதே தவிர, கண்ணில் ஒரு பீதியே இருக்கும் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read : ஐஸ்வர்யா ராயும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. அஜித்க்கு 5ம் முறையாக ஜோடியாகும் இளவரசி

- Advertisement -