அஜித் ஆப்ரேஷன் லைக்கா விட்ட பெருமூச்சு.. இதுல ரஜினிக்கு என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?

Ajith: அஜித்தை பொறுத்தவரை சினிமாவில் நடிப்பது வெறும் டைம் பாஸ்க்கு மட்டும் தான். அதற்கு ஏற்ற மாதிரி தான் நடித்துக் கொடுப்பேன் என்று ஒரு வட்டத்தை போட்டு அதற்குள்ளே இருக்கிறார். அதனால் பெருசாக வாய்ப்பைத் தேடி அலைய மாட்டார். வந்த வாய்ப்புகள் ஏதாவது ஒன்றை எடுத்து நடித்து விடுவார்.

இப்படி இருப்பதினால் தான் அஜித் படங்கள் இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு துணிவு படத்துக்கு பிறகு இன்னும் எந்த படமும் வரவில்லை. இதற்கு இடையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கமிட்டான விடாமுயற்சி படமும் முடிந்த பாடாக இல்லை.

படப்பிடிப்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மேல் ஆகியும் இன்னும் 50% கூட முடியவில்லை. ரொம்பவே ஸ்லோவாகத் தான் கொண்டு வருகிறார்கள். இதற்கு ஒவ்வொருவரும் சில பல காரணங்களை சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் இப்படத்தை தயாரிக்கும் லைக்காவிடம் தற்போது போதுமான பணம் இல்லை என்பதுதான்.

அதாவது அகலகாலை வைத்து விட்டால் ஒவ்வொருவருடைய பாடும் திண்டாட்டம் தான் என்று சொல்வதற்கு ஏற்ப லைக்கா நிறுவனம் ஒரே நேரத்தில் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தையும், ரஜினியின் வேட்டையன் படத்தையும் தயாரித்து வருகிறது.

ரஜினிக்கு என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?

இந்த இரண்டு படங்களுமே பெரிய ப்ராஜெக்ட் என்பதால் இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் பெரிய குழப்பமாய் இருந்திருக்கிறது. இந்த சமயத்தில் தான் அஜித்தின் காதுக்கு கீழே ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணப்பட்டு ரெஸ்ட் எடுக்கும் படியான ஒரு சூழ்நிலை அமைந்துவிட்டது.

அத்துடன் இப்போதைக்கு அஜித் முழுக்க முழுக்க ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் இந்த ஒரு விஷயம் லைக்காவுக்கு சாதகமாக திரும்பிவிட்டது. அதாவது அஜித்தால் ஷூட்டிங் வர முடியாத காரணத்தினால் இப்போதைக்கு விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

அஜித் வருவதற்குள் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிடலாம் என்று லைக்கா பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறார். இந்த ஒரு விஷயம் ரஜினிக்கு ஜாக்பாட் ஆக மாறிவிட்டது. ஆக மொத்தத்தில் இந்த வருஷமும் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளிவருவது சந்தேகம்தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்