விஜய்க்கு நடப்பதெல்லாம் சும்மா டீசர் தான்.. எம்ஜிஆர் பட்ட பாடு, செய்த சாதனை தெரியுமா?

Actor Vijay: திரை பிரபலங்கள் அரசியலில் வருவதற்கு ஆசை காட்டி விட்டதே எம்ஜிஆர் தான். அவருக்கு சினிமாவில் இருந்த பெரும் புகழை வைத்து அரசியலில் வெகு சீக்கிரமே உச்சத்திற்கு சென்றார். அவர் போல வந்து விஜய் விடுவாரோ என்பது தான் இப்போது அனைவரின் பயம். 50 வருடத்திற்கு முன்னாடி எம்ஜிஆருக்கு என்ன நடந்ததோ அதுதான் இப்போது விஜய்க்கு நடக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறது. ஆனால் ‘விட்றாத தளபதி’ என அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை கொடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு லியோ படத்திற்கு நிறைய பிரச்சனைகளை பார்த்து வருகிறோம். அவருக்கு இது புதுசு இல்ல என்றாலும் இந்த படத்திற்கு நாலா புறமும் பிரச்சனை கிளம்புவதற்கு காரணம் விஜய் அரசியலுக்கு வருவது தான்.

ஆனால் விஜய்க்கு நடப்பதெல்லாம் சும்மா டீசர் தான், எம்ஜிஆருக்கு இதைவிட மோசமா நடந்திருக்கு. விஜய்யின் லியோ படத்திற்கு முன்பே இதே நிலைதான் 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கும் வந்தது. இதற்கு காரணம் புரட்சித்தலைவர் திமுகவை விட்டு அதிமுக சென்ற காலகட்டம் அது. இந்த படம் மட்டும் வெளி வந்தால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று திமுகவை சேர்ந்த மதுரை முத்து கூறினார்.

இது மட்டுமல்ல இந்த படம் ரிலீஸ் ஆன போது ஆளும் கட்சியாக இருந்த திமுக சுவரொட்டி விளம்பரத்திற்கு வரியை உயர்த்தியதால் சுவரொட்டி இல்லாமலே விளம்பரம் செய்தனர். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை எப்படியாவது ஊத்தி மூட வேண்டும் என்பதற்காகவே படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் ஏகப்பட்ட குடைச்சலை கொடுத்தனர்.

ஆனால் அதையெல்லாம் மீறி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான தேவி பாரடைஸ் திரையரங்கில் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் சென்னை மவுண்ட் ரோடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதை மீறி படம் மேலும் 31 தியேட்டர்களில் 100 நாட்கள் மேல் ஓடியது.

இப்போதும் விஜய் படம் எப்படி ரிலீஸ் ஆகும் என பார்ப்போம், அப்படியே ரிலீசானாலும் 1000 கோடியை தொட வாய்ப்பே இல்லை. 800 கோடி வசூலை காட்டி விடுங்கள் என்னுடைய மீசையை வழித்துக் கொள்கிறேன் என்று அரசியல் பிரபலங்களும் சினிமாவில் விஜய்க்கு எதிரிகளாக இருக்கக்கூடியவர்களும் மாருதட்டிக் கொள்கின்றனர். இதற்கு சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்களும் மீசையெல்லாம் எங்களுக்கு தேவையில்ல, ஓட்டு போடுற கட்ட விரல வெட்டி எறிந்து விடுகிறீர்களா! என்றும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் தினங்களில் ரிலீஸ் ஆகக்கூடிய லியோ படத்திற்கு என்னென்னலாம் இன்னும் பிரச்சனை கொடுக்க முடியும் என்பதை ரூம் போட்டு பிளான் பண்றாங்க. ஆனா 50 வருடத்திற்கு முன்பு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆர் செய்த சாதனையை மறுபடியும் விஜய் செய்து சாதனை படைக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்