மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? வம்சியை வம்பிழுத்த ப்ளூ சட்டைமாறன்

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் குடும்ப பாங்கான கமர்சியல் படமாக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். ஆனால் வாரிசுடன் மோதிய அஜித்தின் துணிவு படம் வங்கியில் நடைபெற்று வரும் கடன் மோசடிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில் வாரிசு படத்தை நெகட்டிவாக விமர்சனம் செய்யும் நோக்கத்தில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் அமைந்தது. அதில் விஜயின் வாரிசு படம் மெகா சீரியல் போல் உள்ளதாகவும் படத்தில் கதை புதிதல்ல எனவும் பேசினார். இதனிடையே வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி நெகட்டிவாக விமர்சனம் செய்து வருபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொந்தளித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

Also Read: வளர்த்துவிட்டவரை மதிக்காத ராஷ்மிகா.. நச்சென்று பதில் கொடுத்த வெற்றி பட இயக்குனர்

அதில் ஒரு படம் எடுக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா, ஒவ்வொரு இயக்குனர்கள், நடிகர்கள், பின்னணி பணியாளர்கள் என அனைவரும் படம் எடுக்க எவ்ளோ தியாகம் செய்கிறார்கள் என்பது தெரியுமா என வம்சி வினவினார். மேலும் விஜய் போன்ற இந்தியாவில் முன்னனி நடிகராக வளம் வரும் நடிகர் இன்று வரை ஒவ்வொரு பாடலுக்கும் எவ்வளவு பயிற்சி எடுக்கிறார் என்பது தெரியுமா, அவர் தான் என்னுடைய விமர்சகர், நான் அவருக்காக படத்தை எடுப்பதாக வம்சி தெரிவித்தார்.

மேலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனதிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் என்னப்பா,மெகா சீரியல் போல வாரிசு உள்ளதாக தெரிவிக்கிறீர்கள், மெகா சீரியல்களை ஏன் தரக்குறைவாக பேசுகிறீர்கள்.மெகா சீரியல் எடுப்பதற்கும் பல கற்பனை உணர்வு வேண்டும், எங்களுக்கும் அது உள்ளது. நான் என் சாப்ட்வேர் வேலையை விட்டு படம் இயக்க வந்தேன், என் உழைப்பை தவறாக பேசினால், என்னால் எப்போதும் ஏற்க முடியாது என உணர்ச்சிபொங்க வம்சி பேசினார்.

Also Read: விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

நீங்கள் யாரையாவது கீழே வீழ்த்தும் வகையில் நடந்துகொள்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே கீழே இறக்கிவைத்துள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என வம்சி பதிலடி கொடுத்தார்.எனக்கு தெரியும் என் வேலை எப்படிப்பட்டது என்பது, நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என நினைத்தால் முதலில் படத்தை உற்றுநோக்குங்கள், ரசிகர்களை என்டேர்டைன்மெண்ட் பண்ண வாரிசு படம் எடுத்தேன், படமும் அப்படித்தான் உள்ளது என வம்சி தெரிவித்தார்.

வம்சியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறனும், உண்மையை சொன்ன பயங்கரமா வம்சி கொந்தளிக்கிறார், நாட்டில் நீங்கள் மட்டும் உழைக்கிறீர்களா, மத்தவங்களுக்கெல்லாம் காசு சும்மா வருதா,போதாகுறைக்கு தியாகம் வேற பண்றாங்கலாமா, மெகா சீரியல் மாறி இருக்குனு சொன்னது குத்தமா என வம்சியை வறுத்தெடுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறனின் ட்விட் அமைந்துள்ளது.

Also Read: விஜய் படத்தை மண்ணை கவ்வ வைத்த இரண்டு ஹீரோக்கள்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது வம்சி சார்

- Advertisement -