டாப் ஹீரோக்களுக்கு தூதுவிடும் விவாகரத்து நடிகை.. அடுத்த ரவுண்டுக்கு போடும் பிளான்

விவாகரத்து நடிகை தற்போது முழுமூச்சாக இறங்கி விட்டார். சிறிது காலம் உடல் நல பிரச்சனையின் காரணமாக பிரேக் எடுத்திருந்த இவர் தற்போது கணிசமான படங்களை தட்டி தூக்கி வருகிறார்.

அக்கட தேசத்தில் கொடி கட்டி பறந்து வரும் இவர் கோலிவுட்டிலும் அடுத்த ரவுண்டு வர தயாராகி விட்டாராம். அதனாலேயே இதற்கு முன்பு நடித்த ஹீரோக்களுக்கு எல்லாம் தூது விட்டு வருகிறாராம்.

தற்போது நம்பர் நடிகைக்கு பெரிய அளவில் படங்கள் கைவசம் இல்லை. கடந்த வருடம் வெளியான படங்களும் தோல்வி அடைந்து அவரை கொஞ்சம் அப்செட் ஆக்கி இருக்கிறது.

அதனாலயே அவர் இப்போது பிசினஸ், விளம்பர படங்கள் என கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.

அந்த கேப்பில் ஸ்கோர் செய்துவிடலாம் என விவாகரத்து நடிகை முடிவு செய்து இருக்கிறாராம். அதனாலயே தற்போது இவர் சில ஹீரோக்களுக்கு போன் போட்டு பேசி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இருந்தாலும் எந்த ஹீரோ இவருக்கு ஓகே சொல்வார் என்பது தான் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் மங்கம்மா சபதம் போல் களத்தில் குதித்திருக்கும் நடிகை நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார் என்பது மட்டும் உறுதி.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்