அட்லீ சம்பளத்தால் பொறாமைப்படும் இயக்குனர்கள்.. அடுத்த ஆயிரம் கோடி வசூலுக்கு தயார்

Director Atlee : அட்லீ சினிமாவுக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். அதுவும் பாலிவுட்டில் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் 1100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது.

அடுத்ததாக அட்லி எந்த ஹீரோவின் படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏற்கனவே விஜய் உடன் மூன்று முறை கூட்டணி போட்டதால் மீண்டும் இவர்களது கூட்டணி அமையும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் விஜய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

ஆகையால் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருந்து விலக உள்ளதால் கடைசியாக அட்லீ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த சூழலில் அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. எதிர்பார்க்காத இந்த கூட்டணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Also Read : ஜெராக்ஸ் காப்பி போல் எடுக்கப்பட்ட 5 படங்கள்.. அட்லீக்கு முன்பே வேலையை காட்டிய இயக்குனர்

மேலும் இதற்கான கதையை தான் இப்போது தயார் செய்து கொண்டிருக்கிறார். அதோடு அல்லு அர்ஜுனின் படத்தை இயக்க அட்லீக்கு கொடுக்கப்படும் சம்பளம் தான் பலரையும் தலையை சுற்ற வைக்கிறது. அதாவது பாலிவுட்டில் அட்லீ என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

அந்த படம் இமாலய வெற்றி பெற்றவுடன் தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி உள்ளார் அட்லீ. அதன்படி இந்த படத்திற்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். இதனால் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அட்லீ முதலிடத்தில் இருக்கிறார்.

Also Read : பவுன்சர்கள் கலாச்சாரத்தை முதலில் அறிமுகப்படுத்திய நடிகர்.. அட்லீ, அனிருத் வரை பண்ணும் அழிச்சாட்டியம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்