சூப்பர் ஸ்டாரையே கடுப்பாக்கிய இயக்குனர்.. சர்வமும் அடங்கி போய் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் வேட்டையன் இந்த வருட சர்ப்ரைஸ் ஆக ரிலீஸ் ஆக இருக்கிறது. அதேபோல் தலைவர் 171 டைட்டில் டீசரும் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது.

இப்படி பிசியாக இருக்கும் தலைவரின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. அதேபோல் பல இயக்குனர்களும் இதற்காக போட்டி போட்டு வருகின்றனர்.

ஆனால் கைக்கு கிடைத்த வாய்ப்பை தன்னுடைய கத்துக்குட்டி தனத்தால் தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயனின் டான் மூலம் மிகப்பெரும் கவனம் ஈர்த்த இவரை சூப்பர் ஸ்டாரே கூப்பிட்டு பாராட்டினார்.

சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்

உடனே இவர்கள் இருவரும் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு எந்த செய்தியும் இல்லை. விசாரித்ததில் சிபி சக்கரவர்த்தியின் ஓவர் ஆட்டிட்யூட் சூப்பர் ஸ்டாரை கடுப்பாக்கி இருக்கிறது.

அதனாலேயே ரஜினி இந்த இயக்குனர் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம். எப்படியும் தலைவர் படம் நமக்கு தான் என்று கனவுடன் இருந்த இயக்குனரும் தற்போது சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தற்போது அமரனில் பிஸியாக இருக்கும் எஸ் கே அடுத்ததாக ஏ ஆர் முருகதாசுடன் இணைய உள்ளார். அதை அடுத்து மீண்டும் டான் கூட்டணி இணைய இருக்கிறது. இதன் பிறகாவது சிபி சக்கரவர்த்தி சேட்டையை குறைத்து கொண்டால் நல்லது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்