ரஜினியை செருப்பால் அடிப்பேன் என கூறிய இயக்குனர்.. நாகேஷை காட்டி திருத்திய சம்பவம்

Actor Rajini: தன் ஸ்டைலால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த காலகட்டத்திலும் தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டும் இவரை செருப்பால் அடிப்பேன் என கூறிய இயக்குனர் யார் என்பதை இத்தொகுப்பில் காண்போம்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் ரஜினி. அவ்வாறு புகழின் உச்சியில் இருக்கும் இவர் தன் பழைய சம்பவங்களை மறக்காமல், மறைக்காமல் வெட்ட வெளிச்சமாக போட்டு உடைத்து வருகிறார்.

Also Read: இன்று வரை பேசப்படும் எம்ஜிஆர்-எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு வழக்கு.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இந்த நடிகை தான்

தற்பொழுது ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி, இயக்குனர் பாலச்சந்தர் இடம் வாங்கி கட்டிய சம்பவத்தை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது 1970களில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து வந்த ரஜினி தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

அதன் பின் மது அருந்திவிட்டு ஓய்வெடுத்த நேரம் பார்த்து தன்னை படப்பிடிப்பதற்கு மீண்டும் அழைத்தாராம் பாலச்சந்தர். அதன்பின் செய்வதறியாது, மது அருந்தியதை மறைக்கும் பொருட்டு, தன்னை தயார்படுத்தி கொண்டு படப்பிடிப்பிற்கு சென்றாராம். இருப்பினும் இயக்குனர் பாலச்சந்தர் இவர் மது அருந்தியதை கண்டுபிடித்து விட்டாராம்.

Also Read: அடுத்தவர் வேதனையில் சம்பாதிப்பது ஒரு பொழப்பா? லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரோபோ சங்கர் மனைவி

அதன்பின் உனக்கு நாகேஷ் பற்றி தெரியுமா எனக் கேட்டாராம். நீ எல்லாம் அவர் நடிப்பிற்கு முன் ஒன்றுமே கிடையாது. மேலும் அவர் மது பழக்கத்திற்கு ஆளாகி வீணாகியது போல, நீயும் ஆரம்பித்து விட்டாயா?. இனி நான் உன்னை இந்த நிலைமையில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அதன் பின்பு தான் எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் மது அருந்து விட்டு செல்லக்கூடாது என்ற முடிவிற்கு வந்தாராம் ரஜினி. இதுபோன்று தான் சம்பவித்த நிகழ்வுகளை எந்த ஒரு மறைமுகமும் இல்லாமல் வெளிப்படையாய் பகிர்ந்து தன்னை மீண்டும் சூப்பர் ஸ்டார் என நிரூபித்துள்ளார் ரஜினி.

Also Read: 23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்