விடுதலை பட வெற்றிக்கு பின் வெற்றிமாறன் தொடங்கும் 3 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகி மிகப்பெரிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்றிருக்கிறது. மொத்த பட குழுவும் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிலும் ஜெயித்திருக்கிறது. வெற்றிமாறனும் ரசிகர்களின் பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறனின் படங்கள் எப்போதுமே தமிழ் சினிமாவின் அடையாளமாக தான் இருக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வெற்றிமாறன் குறைந்தது இரண்டு வருடங்கள் ஆவது எடுத்துக் கொள்வார். ஆனால் தற்போது விடுதலை படத்திற்குப் பிறகு இவர் கைவசம் அடுத்தடுத்து மூன்று படங்கள் காத்திருக்கின்றன. மூன்றுமே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள் தான்.

Also Read:லவ்வர் பாயாக மாறப்போகும் விஜய் சேதுபதி.. ரீ என்ட்ரியில் மிரட்ட வரும் இயக்குனர்

விடுதலை 2: தமிழ் சினிமா ரசிகர்கள் விடுதலை படத்தை கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியும் வரையில் பேச்சுவார்த்தையாக தான் இருக்கும். ஆனால் விடுதலையை பொருத்தவரைக்கும் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் பத்து நிமிட காட்சியாக முதல் பாகத்திலேயே வந்துவிட்டது. இது ரசிகர்களிடையே எப்போது இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

வாடிவாசல்: விடுதலை 2 முடிந்த கையோடு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார். கோலிவுட் சினிமாவின் ஹாட் டாக் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்த படம் தான். சூரரைப் போற்றும் மற்றும் ஜெய்பீம் போன்ற படங்களை கொடுத்த சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கிடக்கின்றனர்.

Also Read:மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

வடசென்னை 2: கோலிவுட் சினிமாவின் அதிர்ஷ்ட கூட்டணி என்றால் அது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய எல்லா படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தனுஷை தேசிய விருது நாயகனாகவும் வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார். இந்த கூட்டணியில் அசுரன் மற்றும் வடசென்னை திரைப்படங்கள் ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றன.

இதில் வடசென்னை இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது. தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறன் அடுத்தடுத்து விடுதலை 2 மற்றும் வாடிவாசல் திரைப்படங்கள் முடிதத பிறகு வடசென்னை இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் என்று சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

Also Read:அக்கட தேசத்து விஜய் சேதுபதி இவர்தான்.. கமலே கூப்பிட்டு பாராட்டிய ஹீரோ

- Advertisement -