வெங்கட் பிரபு ஹீரோவாக கேரியரை திருப்பி போட்ட படம்! தந்தையை கதறவச்சு சம்பவம்

Director Venkat Prabhu as the hero turned his career around: இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனின் மகன் என்று அடையாளப்படுத்தப்பட்ட வெங்கட் பிரபு அவர்கள் தமிழ் திரையுலகில்  பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர், இயக்குனர்,  பாடலாசிரியர், தயாரிப்பாளர் பல துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வந்தார் வெங்கட் பிரபு.

முதன்முதலாக 2007 இல் இயக்குனராக சென்னை 28 படத்தை  இயக்கி மாபெரும் வெற்றி கண்ட வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் முன்னணி  இயக்குனர் ஆனார்.

சமீபத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவின் கூட்டணியில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திற்கு பின் விஜய்யின் 68 ஆவது படமான G.O.A.T படத்தை இயக்கும் வாய்ப்பு  கிடைத்தது. G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

இன்று முன்னணி இயக்குனராக அறியப்படும் வெங்கட் பிரபு ஒரு காலத்தில் குணச்சித்திர நடிகராக விஜய்யுடன் சிவகாசி மற்றும் அஜித்துடன் ஜி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இவரைப் பற்றிய அறியாத ஒன்று இவர் முன்னணி கதாநாயகனாக தனது தந்தை கங்கை அமரன் இயக்கத்தில், நடிகை சங்கீதாவுடன் பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 90 களின் காலகட்டத்தில் உருவான படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட், படமோ ரிலீஸ் செய்யப்படாமல் தாமதித்துக் கொண்டே இருந்தனர். அன்றே வசந்த கால கொலை என்கின்ற டேக் லைனுடன் படத்தை  நிறைவு செய்திருந்தார் வெங்கட் பிரபு மற்றும் அவரது தந்தை கங்கை அமரன்.

venkat-prabhu-cinemapettai

13 ஆண்டுகள் கழித்து சென்னை 28 திரைப்படத்திற்கு பின்பு மீண்டும் அதே பழைய பூஞ்சோலை திரைப்படத்தை  திரைக்கு கொண்டு வர பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாம். தமிழக மக்கள் அதிர்ஷ்டமோ! அல்லது வெங்கட் பிரபுவின் துரதிர்ஷ்டமோ? இறுதி வரை படம் திரையிட முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.  படம் வெளி வந்தால் மட்டுமே வெற்றியா தோல்வியா என்பதை நிர்ணயிக்க, இவரோ படத்தை வெளியிடாமலே தந்தை தலையில் துண்டை போட்டார். அதேபோல்  வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படமும் வெளிவர முடியாமல் நீண்ட நாட்களாக கிடப்பில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்